சினிமா செய்திகள்

கெளதம்கார்த்திக்கின் புதியபடம் – கார்த்தி சிதம்பரம் தயாரிக்கிறார்?

இயக்குநர் எழில் தற்போது இரண்டு படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் விஷ்ணுவிஷால் நடிக்கும் ஜெகஜால கில்லாடி ஆகிய இரண்டு படங்களை அவர் இயக்குகிறார்.

இவற்றின் வேலைகள் பெருமளவில் முடிந்துவிட்டதெனச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அடுத்ததாக இன்னொரு படத்தை இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறாராம்.

அந்தப்படத்தில் கெளதம்கார்த்திக் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறாராம். அவரோடு நடிகர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஊரடங்குக்காலம் முடிவுக்கு வந்த் பின்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இந்தப்படத்தைத் தயாரிப்பது யார்? என்பது குறித்து உலவும் செய்தி என்ன தெரியுமா?

வாசன் ஐ கேர் நிறுவனம் இப்படத்தின் தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிறுவனம் முன்னாள் நிதியமைச்சர் மகன் கார்த்திசிதம்பரத்துக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதன்மூலம் கார்த்திசிதம்பரம் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts