விஷால் இப்போது, வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில் குலுகுலு படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் நடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. இவற்றிற்கடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. அதேசமயம், அவர் நடிக்கும் அடுத்த படத்துக்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். பிரபல
அமேசான் மழைக்காட்டில் பிறந்து பலமொழிகளைக் கற்று பல்வேறு நாடுகளைக் கடந்து சென்னை வந்து வசிக்கிறார் சந்தானம். கூகுள் என்று பெயர், குல்லுபாய் என்றழைக்கிறார்கள். கிடைத்த வேலைகளைச் செய்து வாழ்ந்து வரும் அவருக்கு உதவி என்று யாராவது கேட்டால் உடனே ஓடிப்போய் செய்யும் பழக்கம்.அதனால் பல சிக்கல்களைச் சந்திக்கிறார். தங்கள் நண்பனை ஒரு கூட்டம் கடத்திவிட்டது மீட்டுக் கொடுங்கள் என்று சிலர்
அப்பாவின் இழப்பைத் தாங்கவியலாமல் மனநெருக்கடிக்கு ஆளாகும் நாயகன் காளிதாஸ் ஜெயராம், மனநல மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு அவரைப் போல சிகிச்சைக்கு வந்திருக்கும் நாயகி தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா,கருணாகரன், நிர்மல் பாலாழி, கெளரி கிஷன் ஆகியோரோடு நட்பு ஏற்படுகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பயணம் போகிறார்கள்.பயணம் எங்கே? அந்தப் பயணத்தில் என்னவெல்லாம்
எட்டு தோட்டாக்கள் படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் ஜூலை 28 அன்று ஊடகத்தினரைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில், இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது.., எனது உதவியாளனாக இருந்த ஶ்ரீகணேஷ்
திரைப்படக்கலை தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’. தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்று குடும்பம், பிள்ளைகள் என்று பொருளாதார அமைதிக்கான அனைத்தையும் முடித்துவிட்டுத் தனது இளமைக் காலத்துக்
காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலையில் சேருகிறார் நாயகன் செங்குட்டுவன். அவர் சேருகிற அன்றே, சென்னை நகரில் ஒரு மர்மக் கொலை. காவல்துறை ஆய்வாளர் யோக்ஜேபி தலைமையிலான குழுவில் இணைந்து அக்கொலையைச் செய்தது யார்? என்கிற விசாரணை நடைபெறுகிறது. அது நடக்கும்போதே மேலும் சில கொலைகள். அவை எப்படி நடக்கின்றன? அவற்றைச் செய்வது யார்? எதற்காகச் செய்கிறார்கள்? என்பதை விவரிப்பதே படம். நாயகன்
சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு தருகிற மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி பெறுகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி. தொடக்கத்தில் அக்கண்டுபிடிப்பையே தடுக்க நினைக்கும் மருந்துநிறுவனக் கொள்ளையர்கள் பின்பு அம்மருந்தைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் எண்ணம் பலித்ததா? இல்லையா? என்பதைச் சொல்ல நினைத்திருக்கும் படம் தி லெஜண்ட். அறிமுக நாயகனாக
சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பத்துதல. இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத்தான் பத்துதல என்கிற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.அதன்பின்,
ஷீலா ராஜ்குமார், ராட்சசன் படபுகழ் சரவணன் ஆகிய இருவரும் ஆதர்ச தம்பதிகள். இவர்களில் சரவணன் ஒரு மருத்துவர். சொந்தமாக பெரிய மருத்துவமனை நடத்துகிறார். நான்கு நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கும் நிறைமாத கர்ப்பிணி ஷீலாவை விட்டுவிட்டு ஒரு முக்கிய அறுவைசிகிச்சைக்காக பெங்களூரு செல்கிறார் சரவணன். அன்றிரவு ஷீலாவுக்கு கட்டாய அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்துக் கொண்டு





















