2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் மூலம் தயாரிப்பு நிறுவனமாக தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான நிறுவனம் ஒய்நாட்ஸ்டுடியோஸ். அதன்பின், இறுதிச்சுற்று, விக்ரம்வேதா அண்மையில் வெளியாகி தேசியவிருது பெற்ற மண்டேலா உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளது அந்நிறுவனம். அந்நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ்,
அமலாபால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்தத்திரைப்படம் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத்திரைப்படத்தில் அமலாபாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன்,
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா,
நடிகர் சூர்யா தயாரித்திருக்கும் படம்”விருமன்”. முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்ட் 8 அன்று நடைபெற்றது.
நான் அமீர்கானின் இரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். லால் சிங் சத்தா படைப்பு, அனைவரும் கண்டு இரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு என இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதி சில காட்சிகளில் வருகிறார்.இந்தப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
நடிகர் விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கிறது. விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார்.
பெரும் தொழிலதிபர் அங்காடித் தெரு மகேஷ், மெக்கானிக் சதீஷ் சுப்பிரமணியம்,வாடகை மகிழுந்து ஓட்டுநர் சாரணேஷ்குமார், பாசமிகு தாத்தா கண்ணன் மாதவன் ஆகிய நால்வரும் எதிர்பாராமல் ஒன்றிணைகிறார்கள். நால்வருக்கும் ஆளுக்கொரு கதை இருக்கிறது. அதன்படி அவர்களுக்குப் பெரும் தொகை தேவை. இதற்காகக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதுதான் வட்டகரா படம்.
1964 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் நடக்கிற கற்பனைக்கதை. இந்திய இராணுவத்தில் இருக்கும் நாயகன் துல்கர்சல்மான், காஷ்மீரில் நடக்கவிருந்த ஒரு பெரிய மதக்கலவரத்தைத் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்துகிறார். அதனால் நாடெங்கும் புகழ்பெறுகிறார். அதன்காரணமாக அவரிடம் எடுக்கப்படுகிற வானொலிப் பேட்டியில், தான் ஓர் அனாதை என்று சொல்கிறார். அன்றிலிருந்து அவருக்கு ஆயிரக்கணக்கான





















