விஜய் ஜோடியாக த்ரிஷா – விஜய் 67 பட ஆச்சரியம்
நடிகர் விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம்.
66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கிறது.
விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார்.
அப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.
மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் 67 படத்துக்கும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.மூன்று வில்லன்களில் ஒருவராக மலையாள நடிகர் பிருத்விராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு படத்துக்கும் புதுப்புது நாயகிகளைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் த்ரிஷாவா? என்றால், கதைப்படி அவர் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தக்கதையில் விஜய்யின் வேடமும் மாறுபட்டதாக அமைந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
இவற்றை படக்குழுவினர் உறுதி செய்தால்தான் அது அதிகாரப்பூர்வமானதாக இருக்கும்.











