வெந்து தணிந்தது காடு ட்ரெய்லர் கண்டேன். இப்போது வந்த லோகேஷ் கனகராஜ் எல்லாம் loki verse என்று ஆரம்பித்துவிட்டார். கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் அந்த ஆசை வந்திருக்க வேண்டும். டிரெய்லரை உற்று நோக்கும்போது மச்சம் என்பது அடமையடாவின் sequal போலவும் எனை நோக்கித் தோயும் பாட்டாவின் prequel போலவும்
எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ள கணம் திரைப்படம் வரும் 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களுடன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கணம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அதில்
கமல்ஹாசன், ரவீனாடண்டன், மனீஷாகொய்ராலா உள்ளிட்ட பலர் நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். கமல்ஹாசனே திரைக்கதை அமைத்திருந்த அந்தப்படம் வெளியாகும் நேரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான அந்தப்படம் அவ்வளவு எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி பெரும் தோல்வியைச் சந்தித்தது. கலைப்புலிதாணு,அப்போதே சுமார்
தமிழ்த்திரையுலகின் புது வசந்தம், பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாகக் காரணமாயிருந்தவர், பூவே உனக்காக படம் மூலம் நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியவர் உள்ளிட்ட பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் இயக்குநர் விக்ரமன். அவருடைய மகன் விஜய் கனிஷ்கா,தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் முதல் படத்தின் பெயர் ஹிட்லிஸ்ட். இப்படத்தை
சூர்யா இப்போது சிறுத்தைசிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டோ அல்லது அதற்கு இடையிலேயோ, பாலா இயக்கும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது. இவ்விரண்டு படங்களையும் முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது
ஒரிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர், ரசிய அமைச்சர் ஆகியோரை உலகமே அதிரக்கூடிய வகையில் வித்தியாசமான தோற்றங்களில் வந்து கொலை செய்கிறார் விக்ரம். உள்ளூர் காவல்துறை முதல் சிபிஐ மற்றும் உலகக்காவல்துறையான இண்டர்போல் வரை அவரைத் தேடுகிறது. அதேநேரம், அவர் பற்றிய தகவல்களை ஒரு மர்மமனிதர் இண்டர்போலிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். விக்ரம் பிடிபட்டாரா? அவர் ஏன் அந்தக்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த அமலாபால், 2014 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 2016 ஆம் ஆண்டில் நடிகை அமலாபாலுக்கு, இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சுந்தர்ஜித்சிங்கின் மகன் பவ்நிந்தர்சிங்
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படம் 2023 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துக்கொண்டிருக்கும் படமும் அதே 2023 பொங்கலன்று திரைக்கு வரவிருக்கிறது என்றொரு செய்தி உலவிக்கொண்டிருகிறது. அதற்குக் காரணம், அண்மையில் அந்தப்படத்தின் தமிழக திரையரங்கு வெளீயீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம்
கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இப்போது ஒரு புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இப்போதுதான் சசிகுமார் நாயகன், படம் தொடங்கும்போது படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கருணாஸ். அவரை வைத்துச் சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பின்,
2013 ஆம் ஆண்டு வெளியான நேரம், 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் ஆகிய இரு மாபெரும் வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஏழாண்டுகள் கழித்து அப்படங்களின் இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் கோல்டு. மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.அஜ்மல் முக்கிய வேடமொன்றில்





















