சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்ட இளைஞர்களை சமுதாய விரோதக் கூட்டங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன?ஊடகங்களில் வெளியாகும் பொய்கள் எப்படி சில சமயங்களில் உண்மையாகி விடுகின்றன? ஆகிய ஆழமான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் படம்தான் ஜான் ஆகிய நான். ஒரு கிராமத்தில் 44 பேர்
எர்த் அண்ட் ஏர் (Earth & Air) மற்றும் தி ஐடியா ஃபேக்டரி (The Idea Factory) ஆகிய அமைப்புகள் ‘என் சென்னை யங் சென்னை’ என்கிற பெயரில் அறியப்படாத சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு முதல், சமூகப் பணி விருதுகளோடு, திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பொழுதுபோக்குப் பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘என் சென்னை யங் சென்னை’
பயிற்சிக் காவலர் அருள்நிதி பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்படாமல் மூடிவைக்கப்பட்ட ஒரு பழைய வழக்கைக் கையிலெடுக்கிறார். அந்த வழக்கு பல்வேறு மர்ம முடிச்சுகள் கொண்டதாக இருக்கிறது. அதை அவர் எப்படிக் கையாள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைத் திகில் கலந்து சொல்லியிருக்கும் படம் டைரி. காவல்துறை வேடத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அருள்நிதி. அழுத்தமான
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21 கோடியே 29 இலட்சம் கடன் பெற்றிருந்தார். ஒருகட்டத்தில் அந்தக் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக, விஷாலும் லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், தி ஷோ பீப்பிள் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் கேப்டன்.இயக்குநர் சக்திசௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் இந்தப்படம் சயின்ஸ் பிக்சன் திரில்லர் வகைத் திரைப்படம். டெடி படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆர்யா,சக்திசௌந்தர்ராஜன் கூட்டணியில் உருவாகியிருப்பதால் இப்படம் இரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படம். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின்
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய்சேதுபதி உட்பட பலர் நடிக்கும் படம் பிசாசு 2. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடல் காணொலி நேற்று வெளியானது. கார்த்திக் ராஜா இசையில், நெஞ்சை கேளு என்று தொடங்கும் அந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார். நெஞ்சை கேளு அது சொல்லும் உறவென்ன வழித்துணையா கண்ணைக் கேளு அதுசொல்லும் இரவென்ன இவள்
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், அறிவழகன் இயக்குநராக அறிமுகமான படம் ‘ஈரம்’. ஆதி, சிந்து மேனன், சரண்யா மோகன், நந்தா, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னணி இசை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் என பார்வையாளர்களைப் படம் கட்டிப் போட்டது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘வல்லினம்’, ‘ஆறாது
நடிகர் விஜய்க்கு சென்னை நீலாங்கரையில் மிகப்பெரிய பங்களா இருக்கிறது. அங்குதான் குடும்பத்துடன் வசித்துவருகிறார். அதுதவிர அடையாறில் பெரிய அலுவலகம் ஒன்றும் வைத்திருக்கிறார். இப்போது அவர் புதிதாக ஒரு குடியிருப்பை வாங்கியிருக்கிறாராம்.அதுபற்றி திரையுலகில் ஆச்சரியமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். காரணம் அதன்விலை. சென்னையில் இதுவரை இல்லாத விலையாக, ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்
விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கலாம். அதன்படி இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா ஜூலை 25 அன்று பதவியேற்றுக் கொண்டார். அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்





















