செய்திக் குறிப்புகள்

கேப்டன் ஒரு ஆக்‌ஷன் படம் ஓர் அழகான காதலும் இருக்கிறது – ஆர்யா பெருமிதம்

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், தி ஷோ பீப்பிள் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் கேப்டன்.இயக்குநர் சக்திசௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் இந்தப்படம் சயின்ஸ் பிக்சன் திரில்லர் வகைத் திரைப்படம்.  

டெடி படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆர்யா,சக்திசௌந்தர்ராஜன் கூட்டணியில் உருவாகியிருப்பதால் இப்படம் இரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் ஆர்யாவுடன்  சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
 
செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. 

அதில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். 

இவ்விழாவினில் ஒளிப்பதிவாளர் யுவா பேசியதாவது..,

இயக்குநர் சக்தி எப்பொழுதும் ஒரு புதுவித ஐடியாவுடன் தான் வருவார். அவரின் கற்பனை பிரமிப்பாக இருக்கும். இரசிகர்களுக்குப் பிரமிப்பைத் தரும் வண்ணம், சரியான திட்டமிடலுடன் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு ஆதரவு தாருங்கள்  நன்றி என்றார்.
 
படத்தொகுப்பாளர் பிரதீப் பேசியதாவது…..

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளங்களைக் கொடுக்கும் ஒரு இயக்குநரிடம் பணிபுரிவது, ஒரு அரிய வாய்ப்பு, அத்தகைய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. இயக்குநருக்கு நான் இந்நேரத்தில்  நன்றி கூறிக்கொள்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் டி.இமான் பேசியதாவது….,

இந்தப் படத்தில் ஆர்யா கடின உழைப்பைக் கொடுத்துள்ளார், அது திரையில் தெரிகிறது. அதிகமாக கிராபிக்ஸ் இருக்கக் கூடிய கதைக்களத்தைத் தான் இயக்குநர் சக்தி கொண்டு வருவார். அது மிகவும் கடினமான ஒரு காரியம். ஏனென்றால் கற்பனையான உருவத்தை இல்லாமலே இயக்க வேண்டும். அதற்கு இசையமைக்க வேண்டும். அது மிகவும் சவாலான காரியம்.இயக்குநருடைய தெளிவான சிந்தனை தான் திரைப்படத்தை நேர்த்தியாக்கி இருக்கிறது. இந்தப் படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார். அவருக்கு  நன்றி. அனைவருக்கும் என் நன்றிகள் என்றார். 

நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பேசியதாவது..,

இந்தப் படம் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இந்தப் படத்தில் ஒரு ஆழமான காதல் கதை இருக்கிறது. இயக்குநர் சக்தி  உடைய கடின உழைப்பு படத்தைச் சிறப்பாக மாற்றி இருக்கிறது. நடிகர் ஆர்யா மிகுந்த உறுதுணையாக இருந்தார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது என்றார். 

நடிகர் ஆர்யா கூறியதாவது..,

நாங்கள் இந்தக் கதையை தயாரிப்பாளர் ஸ்வரூப்பிடம் கூறும் போது, அவர் எங்களை முழுதாய் நம்பினார். படத்திற்குத் தேவையான அனைத்தையும் கொடுத்தார். இயக்குநர் சக்தி உடைய சிறப்பு என்னவென்றால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு புது ஜானரை முயற்சிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளை எல்லாம் அவர் சிறப்பாக திரையில் கொண்டு வருவார். இந்தப் படத்தின் சண்டைகாட்சிகளை சிரத்தை எடுத்துச் செய்துள்ளோம். ஒரு பிரமாமண்ட மிருகத்துடன் சண்டை போடும் வகையில் இருக்கவேண்டுமென, அதற்கு ஏற்றார் போல் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இமான் சார் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று தான் சொல்ல வேண்டும்.  இது ஒரு ஆக்சன் படம் என்றாலும், அதில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை  நன்றி என்றார். 

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் பேசியதாவது..,

கேப்டன் படம், நான் செய்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம். படம் உருவாக ஆர்யாவும், தயாரிப்பாளர் ஸ்வரூப்பும் தான் காரணம். இதுபோன்ற படங்களை நம் ஊரில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இந்தப் படம் உருவாவதற்கு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி கூற வேண்டும். இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கமான படம்.உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் என்றார். 

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…..

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் படைப்பே கேப்டன் என்ற பெயரில் வந்திருப்பது மகிழ்ச்சி. படத்தை நேர்த்தியாக உருவாக்குவதில் சிறந்த இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன், அவருடைய எண்ணத்தை இமான் இசையாக்கி இருக்கிறார். நடிகர் ஆர்யா சிறப்பான நடிகர். அவர் திரைப்படத்தை வெளியிடுவதிலும் ஒரு பகுதியாக இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். 

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி பேசியதாவது…….

கேப்டன் படத்தின் இசையும் டிரெய்லரும் பான் இந்தியா திரைப்படத்திற்கான அம்சங்கள் அனைத்தும் நிறைந்து இருப்பதை நிரூபிக்கிறது. இந்தப் படத்தின் டைட்டிலுக்கு பொருத்தமானவர் ஆர்யா. ஒரு வெற்றிக் கூட்டணி மீண்டும் படம் பண்ணியுள்ளனர். படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்றார். 

நடிகர் சந்தானம் பேசியதாவது…….

என்னுடைய நட்பு ஆர்யாவுடன் மிகவும் நெருக்கமான ஒன்று. ஆர்யா உடைய எந்தத் திரைப்படமாக இருந்தாலும், அதற்கு என் அன்பு இருக்கும். இது ஒரு ஏலியன் படம், இந்தப் புதுவிதமான கற்பனைக்கே எனது வாழ்த்துகள். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts