அஜீத்தின் விசுவாசம் படம் பற்றிப் பரவிய வதந்தி
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள விசுவாசம் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முழுமையாக அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு, ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு முடிவு செய்து பணிபுரிந்து வருகிறது.
இந்நிலையில், ‘விசுவாசம்’ பேய்ப் படம் என்றும் அஜித் நடிக்கவுள்ள முதல் பேய்ப் படம் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
ஆனால், ‘விசுவாசம்’ பேய்ப் படம் அல்ல. குடும்பப் பின்னணியில் உருவாகும் படமாகும். தனது கதாபாத்திரத்திற்காக அஜித், துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முதன் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.











