செய்திக் குறிப்புகள்

கார்த்தி நடிக்கும் புதியபடம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்தி இப்போது கடைக்குட்டிசிங்கம் படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் புதியபடம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.

அதில்,

“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தைத் தொடர்ந்து கார்த்தி, ரகுல் பிரீத்சிங் வெற்றி ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள் .

மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன்,ஆர்ஜே விக்னேஷ்,அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.இவர்களுடன் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார்.

இப்படம் மூலம் ரஜத் ரவிசங்கர் இயக்குநராக அறிமுகமாகிறார்.இவர்,”எங்கேயும் எப்போதும்” இயக்குநர் சரவணன், பிரபல இந்தி இயக்குநர் அனுராக்காஷ்யப்,இயக்குநர் ஆர்.கண்ணன் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்,ஒளிப்பதிவு ஆர்.வேல்ராஜ், படத்தொகுப்பு ரூபன்,கலை ஜெயஸ்ரீநாராயணன்,சண்டைப்பயிற்சி அன்பறிவ்,பாடல்கள் கபிலன்,தாமரை,விவேக்,

பெயரிடப்படாத கார்த்தி 17 படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார்.

இவர், சூர்யா நடித்த சிங்கம்2 படத்தைத் தயாரித்தவர்.தற்போது விரைவில் வெளியாக இருக்கும் திரிஷா நடிப்பில் ஆர்.மாதேஷ் இயக்கத்தில் “மோகினி“ படத்தைத் தயாரித்து வருகிறார்.

கார்த்தி 17 படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 8ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் 15 நாட்களும், ஹைதராபாத்,மும்பை,இமயமலை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

Related Posts