இனி இருக்காது இடைவெளி – கிருஷ்ணாவுக்கு வாழ்த்து

தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும் இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரருமான
நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 ஆவது படத்தின் துவக்க விழா இன்று சென்னை வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இந்தப்படத்தை,டான் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் எல்.கணேஷ் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்குகிறார்.
இப்புதிய படத்தின் தொடக்க விழாவில் கழுகு படத்தின் இயக்குநர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
விழாவில் இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் நாகர்ஜூன், இசையமைப்பாளர் சாம் cs,
கலை இயக்குனர் பாப்ப நாடு சி.உதயகுமார்,
படத்தொகுப்பாளர் வெற்றிகிருஷ்ணன்,
மேனேஜர் துரை சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நடிகர் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இந்தபடத்தில் வர்ஷா விஷ்வநாத் கதாநாயகியாக நடிக்கிறார்
கிராமத்துக்கதையாக உருவாகவிருக்கிறது இந்தப்படம்.
திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.
சஸ்பென்ஸ் ,மற்றும் ஆக்ஷன் நிறைந்த கமர்சியல் படமாக அனைவரும் இரசிக்கும் படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிருஷ்ணா நடிக்கும் இந்தப்படத்தின் மூலம் இனி இடைவெளியின்றி அவர் நடித்துக் கொண்டிருக்கும் படமாக அமையும் என்று அனைவரும் கிருஷ்ணாவை வாழ்த்தினர்.