சினிமா செய்திகள்

ரஜினி படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள முதல் அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் தேதிகள் ஒதுக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்க உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்துக்கான கதையை ரஜினிகாந்திடம் கூறிய ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதையை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே இந்தப் படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் தற்போது படத்தின் தலைப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், ’எனது அடுத்த படத்தின் தலைப்பு நாற்காலி அல்ல. தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

இப்படம் குறித்து முதலில் வெளியிடப்பட்ட செய்தி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts