விஷ்ணுவிஷாலின் ஆசை நிராசையானது
விஷ்ணுவிஷால் இப்போது காடன், ஜகஜால கில்லாடி, எஃப ஐ ஆர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் பட இயக்குநர் செல்லா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறாராம்.
இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ராட்சசன் படம் இந்தியில் குரல்மாற்று செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவருக்கும் தாய்மொழி இந்தி என்பதால், இப்படத்தை இந்தியில் திரும்ப எடுத்து அதில் தாமே நடிக்கலாம் என்று ஆசைப்பட்டாராம்.
ஆனால் அவருடைய ஆசை நிராசையாகிவிட்டதாம்.
ஏனெனில், இப்படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட்டதால்,அங்குள்ள தொலைக்காட்சிகளில் படம் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.
இதனால், மீண்டும் அதே கதையில் விஷ்ணுவிஷால் நடித்தால் மக்கள் அதை ரசிக்கமாட்டார்கள் என்று சொல்லிவிட்டார்களாம்.
இதனால் வெற்றிகரமான ஒரு படம் கையிலிருந்தும் இந்தியில் நடிக்க முடியவில்லையே என்கிற வருத்தத்தில் இருக்கிறாராம் விஷ்ணுவிஷால்.
ஆனால், இந்தப்படத்தின் இந்தி உரிமையை விற்ற வகையில் சில கோடிகள் இலாபம் கிடைத்திருக்கிறதாம். அது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.











