சினிமா செய்திகள்

செல்வமணி அறிக்கை வந்தவுடன் சூர்யா கார்த்தி 10 இலட்சம் நிதியுதவி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கல்விக் கூடங்கள், திரையரங்குகள் ஆகிய அனைத்துமே மூடப்பட்டுள்ளன. மேலும் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

திரைப்படத் தொழிலாளர்களின் நிலை குறித்து, அவர்களுக்கு உதவ நடிகர் – நடிகைகள் என அனைவரும் முன்வர வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

நமது சம்மேளனத்தில்‌ உறுப்பினராக உள்ள 25 ஆயிரம்‌ உறுப்பினர்களில்‌ இவரைப் போல ஒரு வேளைச் சோற்றிற்குக் கஷ்டப்படும்‌ தொழிலாளர்கள்‌ பதினைந்தாயிரம்‌ பேர்‌ இருப்பார்கள்‌. ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால்‌ அவர்கள்‌ கஞ்சிச் சோறாவது சாப்பிட்டு உயிர்‌ வாழ இயலும்‌. பத்தாயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால்‌ ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும்‌ 1250 ரூபாய்‌ எனக் கணக்கு வைத்தால்‌ இரண்டு கோடி ரூபாய்‌ ஆகிறது.

கருணை உள்ளம்‌ படைத்த தாங்கள்‌ தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து, உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர்‌, வாழ்வு அளிப்பீர்‌, நிதி அளிப்பீர்‌ என அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌

என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த அறிக்கை வெளியானவுடனே நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் சார்பில் பத்து இலட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள்.

Related Posts