சினிமா செய்திகள்

ஏப்ரல் 5 யோகிபாபு திருமண வரவேற்பு – தமிழக முதல்வர் சொன்னது என்ன?

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகிபாபு. கதாநாயகனாகவும் சில படங்களில் நடிக்கிறார்.

05.02.2020 அன்று யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் அவருக்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் தீடீரென இரக்சியமாக நடந்ததால் திருமண வரவேற்பை சென்னையில் பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டனர்.

ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையிலுள்ள ஹில்டன் நட்சத்திர விடுதியில் திருமண வரவேற்பு வைத்துள்ளனர்.

இதற்கான அழைப்பிதழை திரையுலகினருக்கு வைத்துக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. இந்நிலையில் மார்ச் 23 இரவு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளார் யோகிபாபு.

அப்போது அவருடன் தர்மபிரபு பட இயக்குநர் முத்துக்குமரன் மற்றும் பாடகர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் நிலையில் ஏப்ரல் 5 இல் திருமண வரவேற்பு நடக்குமா? என்கிற ஐயம் எல்லோருக்கும் இருக்கிறது.

இதுகுறித்து முதலமைச்சர் என்ன சொன்னார்? என்று கேட்டதற்கு,கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக நடக்கின்றன. ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் எல்லாம் கட்டுக்குள் வந்துவிடும் என்று நம்புகிறோம்.அப்படி நடந்தால் அவசியம் வருகிறேன் என்று சொன்னாராம்.

ஆனாலும் நாளுக்கு நாள் மாற்றம் நடப்பதால் அதற்கேற்ப முடிவுகள் மாறலாம் என்றும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறதாம்.

Related Posts