ஓ மை கடவுளே படத்தால் நிகழ்ந்த ஆச்சரியங்கள் – படக்குழு ஆனந்தம்
பிப்ரவரி 14 அன்று வெளியான படம் ஓ மை கடவுளே. புது இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக்செல்வன், ரித்திகாசிங் சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப்படம் தமிழக திரையரங்குகளில் மட்டும் சுமார் பத்துகோடி வசூல் செய்திருக்கிறதாம்.
அசோக்செல்வன் நடித்து இவ்வளவு வசூல் என்பது பெரிய ஆச்சரியம் என்றால் அதுமட்டுமின்றி இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் மூன்றரை கோடிக்கு விற்றிருக்கிறதாம்.
படத்தின் மொத்தச் செலவும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் மட்டுமே கிடைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இவை தவிர இப்படத்தைத் தெலுங்கில் எடுக்கும் உரிமை சுமார் இரண்டு கோடிக்கு விற்பனையாகியிருக்கிறதாம்.
அதுமட்டுமின்றி இந்தி உரிமைக்கும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். யாருக்கும் உரிமை கொடுக்காமல் தயாரிப்பாளர் டில்லிபாபுவே இந்தியில் இப்படத்தைத் தயாரிக்கத் திட்டமிடுகிறாராம்.
வசூல் தாண்டி, இப்படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு பெரிய கதாநாயகர்களிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறதாம்.
இந்தச் செய்திகளால் ஒட்டுமொத்தப் படக்குழுவும் அளவில்லா மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.











