சினிமா செய்திகள்

விஜய் 65 ஆவது பட இயக்குநர் இவர்தான் – விக்கிபீடியாவில் பரவிய வதந்தி

விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முருகதாஸ், சுதா கொங்காரா, லோகேஷ் கனகராஜ், மகிழ் திருமேனி, ஷங்கர், அஜய் ஞானமுத்து ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.

இறுதியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விஜய்யின் 65 ஆவது படத்தை கோப்ரா பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க உள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப் புகைப்படமாக எடுத்து பதிவிட்ட ரசிகர் ஒருவர், இது உண்மையா? எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அஜய் ஞானமுத்து, “இது யார் பாத்த வேலைனு தெரியலையே” என கமெண்ட் அடித்திருக்கிறார்.

விக்கிபீடியாவை பலரும் உண்மையென நம்பிக்கொண்டிஉர்க்கும் வேளையில் இதுபோன்ற செயல்களைச் செய்யலாமா? என்கிற விமர்சனங்களும் வருகின்றன.

Related Posts