சினிமா செய்திகள்

மாஸ்டர் விழாவில் விஜய்சேதுபதி அதிருப்தி ஏன்? அதர்வா கலந்து கொண்டது எப்படி?

விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளீயீட்டுவிழா நேற்று (மார்ச் 15) மாலை சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது.

அவ்விழாவுக்கு ஊடகங்களுக்கும் விருந்தினர்களுக்கும் அழைப்பில்லை, படக்குழுவினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று சொல்லப்பட்டது.

ஆனால் நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா கலந்து கொண்டிருந்தார். அவர் மட்டும் எப்படி கலந்து கொண்டார்?

அவரும் தயாரிப்பாளரின் குடும்ப உறுப்பினர் என்கிற முறையிலேயே கலந்து கொண்டாராம்.

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் மாஸ்டர் படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் திருமணம் நிச்சயம் நடந்திருக்கிறது. இரகசியமாகத் திருமணமும் முடிந்துவிட்டதோ? என்னவோ?

அந்த ஆகாஷ்தான் இந்த விழாவில் யார் யாருக்கு எவ்வளவு அனுமதிச் சீட்டுகள் வழங்கவேண்டும் என்று முடிவெடுக்கிற இடத்தில் இருந்தாராம்.இதனால்தான், விஜய்சேதுபதி எனக்கு நிறைய எண்ட்ரிபாஸ் கிடைக்கல என்று மேடையிலேயே அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அந்த ஆகாஷ் அழைப்பின் பேரில்தான் அதர்வா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்கிறார்கள்.

Related Posts