September 17, 2026
சினிமா செய்திகள்

அஜீத் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க?

நடிகை கஸ்தூரி சமூகவலைதளமான ட்விட்டரில் தீவிரமாக இயங்கிவருபவர்.
அதனால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவார். அவர் சொல்லும் கருத்துகள் சர்ச்சையாகும் அல்லது அவரைப்பற்றிச்சொல்லப்படுக் கருத்துகள் சர்ச்சையாகும்.

அதுபோல விஜய் அஜீத் போன்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களோடும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படும்.
இப்போது மீண்டும் அப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அஜீத் ரசிகர் என்கிற அடையாளத்தோடு இயங்கும் ஒருவர், கஸ்தூரியை நேரடியாகக் குறிப்பிட்டு அறுவெறுப்பான பதிவொன்றைப் போட்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அதன் பின்னூட்டத்திலும் மிக அறுவெறுக்கத்தக்க பதிவுகள்.

அவற்றைப் படம் பிடித்துப் போட்டு, அதில் அஜீத் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க? என்று கேட்டதோடு?  வெட்கம், அழுக்கு பிடித்த அஜித் ரசிகர்கள் என்கிற குறிச்சொற்களையும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு ஆதரவாகப் பலரும், எதற்கெடுத்தாலும் அஜீத்தை வம்புக்கு இழுப்பதா? என்று சிலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

Related Posts