சினிமா செய்திகள்

துருவ் விக்ரமின் அடுத்த இயக்குநர் பற்றிய புது தகவல்

விக்ரம் மகன் துருவ்விக்ரம் அர்ஜூன்ரெட்டியின் மொழிமாற்றான ஆதித்யவர்மா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ஆதித்ய வர்மா படம் 2019 நவம்பர் 22 ஆம் தேதி வெளியானது. அப்படம் வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. இதுவரை துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில்,பாலா இயக்கத்தில் துருவ்விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் அதேபடமான வர்மாவை வெளியிடும் முயற்சியில் இப்போது இறங்கியிருக்கிறார்கள்.

துருவ் விக்ரமுக்கு இயக்குநர் விஜய் ஒரு கதை சொன்னதாகவும் அது பிடித்துவிட்டதால் படமாக எடுக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தன. விஜய் இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து இயக்கும் தலைவி பட வேலைகளில் இருக்கிறார்.

இதற்கிடையே,பரியேறும்பெருமாள் தனுஷ் நடிக்கும் கர்ணன் ஆகிய படங்களின் இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்றொரு செய்தி உலா வருகிறது.

மாரி செல்வராஜ் இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் கர்ணன் படத்தை முடித்ததும் புதிய படம் தொடங்கவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.

Related Posts