சினிமா செய்திகள்

ரஜினி 168 – மீண்டும் அனிருத்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட மற்றும் அண்மையில் வெளியான தர்பார் ஆகிய படங்களில் ரஜினியின் அறிமுகப்பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் அனிருத் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். 

பேட்ட படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற  தொடக்கபபாடலான மரண மாஸ் என்கிற பாடலை எஸ்.பி.பி அனிருத் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். கடையில் ரஜினியும் பேசியிருப்பார்.

அதேபோல,தர்பார் படத்துக்கும் அனிருத்தே இசையமைத்திருந்தார். அந்தப்படத்தில் இடம்பெற்ற தொடக்கப்பாடலான சும்மா கிழி என்கிற பாடலை அனிருத்தும் எஸ்பிபியும் இணைந்து பாடியிருந்தனர். கடையில் ரஜினி பேசியிருந்தார்.

அவ்விரு பாடல்களுமே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இப்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ரஜினியின் 168 ஆவது படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.   
ஆனாலும் இந்தப்படத்தின் தொடக்கப்பாடலையும் அனிருத்தே பாட வேண்டும் என்று ரஜினி விருப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இதனால் இந்தப்படத்திலும் தொடக்கப்பாடலை அனிருத்தே பாடவிருக்கிறார் என்கிறார்கள்.அனிருத்துடன் மீண்டும் எஸ்பிபியைச் சேர்க்கலாமா? வேண்டாமா? என்பது பரிசீலனையில் உள்ளதாம்.

திரைத்துறையின் மூடநம்பிக்கைகளுக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

Related Posts