சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டான் – மேலும் இணைந்த நடிகர்கள் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் இப்போது ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவற்றில் டாக்டர் படம் மார்ச் 26 ஆம் தேதி வெளீயாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தொடர்ந்து, ‘டான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நாளை (பிப்ரவரி 11) தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சிபிச் சக்ரவர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் ஆகியன இணைந்து தயாரிக்கின்றன.

இதில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ப்ரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். மேலும், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்கவுள்ள சில முக்கிய நடிகர்களை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய் மற்றும் குக்வித்கோமாளி புகழ் சிவாங்கி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts