Uncategorized சினிமா செய்திகள்

சிக்கலில் எம்ஜிஆர் மகன் படக்குழு

சீமராஜா படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கும் புதிய படம்
’எம்.ஜி.ஆர் மகன்’. இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் கவனிக்கிறார் இயக்குநர் பொன்ராம். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் கடைசியில் தேனியில் தொடங்கியது.

இந்தப்படப்பிடிப்பில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் தினசரி பேட்டா கொடுக்கப்படாமல் இருக்கிறதாம்.

இந்தப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் பொன்ராமே தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதனால் கூடுமானவரை பணத்தை மிச்சப்படுத்தத் திட்டமிட்டு அவர் இவ்வாறு செய்கிறார் என்றொரு பக்கம் குற்றம் சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம் ஸ்கிரீன்சீன் நிறுவனம்தான் தயாரிக்கிறது, அந்நிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கல் காரணமாக தொழிலாளர்களுக்குப் பணம் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இவற்றில் எது உண்மையோ தெரியவில்லை. ஆனால் இப்படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்குச் சம்பளம் வரவில்லை என்பது உண்மை என்கிறார்கள்.

Related Posts