September 25, 2026
சினிமா செய்திகள்

ரஜினி தனுஷ் மோதல் – திரையுலகில் பரபரப்பு

இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஹீரோ. இப்படம் 2019 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதே தேதியில், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படமும் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

இதனால் முதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த படங்கள் நேரடியாக மோதும் சூழல் உருவானது.

இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம்.தனுஷின் பட்டாஸ் படத்தின் வேலைகள் திட்டமிட்டபடி முடியவில்லை என்பதால் அதன் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.

டிசம்பர் 20 ஐ விட்டால் அடுத்த பெரிய வெளியீட்டுத் தேதி 2020 பொங்கல்.தான்.

அந்தத் தேதியில் ரஜினியின் தர்பார் வெளியாகவிருக்கிறது.அந்தத் தேதியில் மாமனார் ரஜினி படத்துடன் மோதுவதா? என்று தனுஷ் யோசிக்கிறாராம்.

அதேநேரம்,2020 பொங்கல் செவ்வாய் புதன்கிழமைகளில் வருகிறது. எனவே அதற்கு முந்தைய வெள்ளியான சனவரி 9 ஆம் தேதி வெளியிடலாம். கிட்டத்தட்ட ஒருவாரம் விடுமுறை நாட்கள் இருப்பதால் இரண்டு படங்கள் வெளியிடலாம்.

அந்த இரண்டாவது படம் நம்முடையதாக இருக்கட்டும் என்று சொல்லி தனுஷை சம்மதிக்க வைக்க முயன்று வருகிறார்களாம்.

தனுஷ் ஒப்புக்கொண்டால் ரஜினி படத்துடன் அவருடைய படமும் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

அப்படி நடந்தால் திரையரங்கு, வசூல் கணக்கு எல்லாம் சரி, அதற்கு வெளியே ஊடகங்களிலிம் சமூக வலைதளங்களிலும் இது எவ்வாறு பிரதிபலிக்கும்? என்று தெரிந்திருப்பதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts