சினிமா செய்திகள்

கைதி வெற்றி காரணமாக விஜய் எடுத்த அதிரடி முடிவு

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் 64 என்றழைக்கப்படும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டாவது படம் கைதி வெளியானது.

அதுவும் விஜய்யின் பிகில் வெளியான அன்றே கைதியும் வெளியானது.

அப்படம் விஜய் படத்தைவிட நன்றாக இருக்கிறது என்று பலரும் சொல்லிவருகின்றனர்.

இதனால் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உடனடி நன்மை நடந்திருக்கிறதாம்.

விஜய் 64 படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்னொரு படம் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

அதற்காக ஒரு கதைக்கருவை லோகேஷ் சொல்லியிருக்கிறார். அது விஜய்க்கு பிடித்துவிட்டதாம்.

இப்போது நடக்கும் படத்தை முடித்துவிட்டு விஜய் இன்னொரு படம் நடிக்கப்போவார்.

அந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜ், முழுமையான திரைக்கதையை உருவாக்குவார்.

அதன்பின் விஜய் 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்கிற அறிவிப்பு வருமென்கிறார்கள்.

Related Posts