பிகில் ரிலீஸ் தேதி – புதிய தகவல்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பிகில்’. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது
படக்குழு.
இந்த முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படம் தீபாவளி வெளியீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது. தீபாவளி அக்டோபர் 27 ஞாயிறன்று வருகிறது.
இதனால் அதற்கு முந்தைய வெள்ளியான அக்டோபர் 25 ஆம் தேதியே படத்தை வெளியிடலாம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பு அக்டோபர் 24 ஆம் தேதி வியாழன்றே படம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது.
இப்போது கோயம்பேடு ரோகிணி திரையரங்கைச் சேர்ந்த ரேவந்த் சரண், பிகில் அக்டோபர் 25 அல்லது 26 ஆம் தேதி வெளியாகலாம் என்ரு சொல்லியிருக்கிறார்.
ரோகிணி திரையரங்கில் பிகில் படத்தைத் திரையிடுகிற ஒப்பந்தம் போடும் முயற்சியில் இருக்கும் அவர் இதைச் சொல்லியிருப்பதால் இதற்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.











