சினிமா செய்திகள்

ரஜினிக்கு நன்றி சொன்ன நயன்தாரா படக்குழு

நடிகை நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாக உள்ள 65 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “நெற்றிக்கண்” படத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மிலிண்ட் ராவ் இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளதாம்.

இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பவர் நயன்தாராவின் கணவர் என்று சொல்லப்படுகிற விக்னேஷ்சிவன்.

அவர், இப்பட அறிவிப்பை வெளியிட்டதோடு படத்தின் பெயரைக் கொடுத்ததற்காக ரஜினிகாந்த மற்றும் கவிதாலயா நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Posts