புகைப்படப் புகழ் நடிகை ரம்யாபாண்டியனுக்கு வந்த திடீர் சோதனை
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரம்யாபாண்டியன்.
அண்மையில் இவர் தன் வீட்டு மொட்டை மாடியில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அவரே எதிர்பாராத அளவு அந்தப் புகைப்படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
அதனால் உடனடியாகச் சில புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் நேற்றிரவு அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு காணொலி பதிவில் என்னுடைய ட்விட்டர் கணக்கின் பெயர் இதுதான் என்றும் இன்ஸ்டாகிராமில் என்னுடைய கணக்கின் பெயர் இதுதான் என்றும் இவையிரண்டும் தான் உண்மையானவை என்று சொல்லியிருந்தார்.
திடீரென அவர் இப்படி ஒரு காணொலியை வெளியிடக் காரணம் இருக்கிறது.
நடிகை ரம்யாபாண்டியன் என்றொரு ட்விட்டர் கணக்கில், அரை நிர்வாணக் கோலத்தில் முதுகுகாட்டி அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

ramyapandian fake
அதற்கு நிறையப் பேர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பட வாய்ப்பு இல்லாததால் மிகவும் இறங்கிவந்துவிட்டார் என்று திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அது போலியான கணக்கு என்று சொல்வதற்காகவே ரம்யாபாண்டியன் தன்னுடைய பக்கத்தில் அந்தக் காணொலியை வெளியிட்டிருக்கிறார்.











