கோமாளிக்கு ஆறு கோடி – புதிய தகவல்
ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியானது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியுள்ளார்.
வெளியீட்டுக்குப் பின் நல்ல வரவேற்பைப் பெற்று இப்படம் ஓடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றிருக்கிறதாம்.
தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகியனவற்றுக்காக ஆறு கோடி கொடுத்திருக்கிறது விஜய் தொலைக்காட்சி என்று சொல்கிறார்கள்.
ஜெயம்ரவி நடித்த படங்களில் தனிஒருவன் படத்தின் வசூல் மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பக்கமாக இந்தப்படத்தின் தமிழக வசூல் இருக்கும் என்று கூறப்படுகிற நேரத்தில், இந்தப்படத்தின் தொலைக்காட்சி உரிமை ஆறுகோடிக்கு விற்றிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்று நம்பலாம்.












