சினிமா செய்திகள்

தனுஷின் என்னை நோக்கிப் பாயும் தோட்டா – முக்கிய அறிவிப்பு

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில், கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டாவும் ஒன்று.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கின்றன.

படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது.

பொருளாதாரச் சிக்கல் காரணமாக பட வெளியீட்டில் தாமதம் நேர்ந்தது. இப்போது சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கிறதாம்.

செப்டம்பர் 6 ஆம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts