சினிமா செய்திகள்

கோமாளி பட வெற்றி – ஹிப்ஹாப்தமிழா ஆதி வருத்தம்

ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கோமாளி.

இந்தப்படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ், இஅய்க்குநர் பிரதீப்ரங்கநாதன் மற்றும் நாயகன் ஜெயம்ரவி உட்பட படக்குழுவினர் அனைவரும் பெஉம் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஒரேஒருவர் மட்டும் இந்த வெற்றி காரணமாக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம். அந்த ஒருவர் யார்? படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப்தமிழா ஆதி என்கிறார்கள்.

அவருக்கு ஏன் வருத்தம் என்றால், இந்தக்கதையில் முதலில் அவர்தான் நாயகனாக நடிப்பதாக இருந்ததாம். கதையைக் கேட்டுவிட்டு, கொஞ்சம் பொறுங்கள் படம் எடுக்கலாம் என்று ஆதி சொல்லியிருக்கிறார்.

பொறுமை காத்த நேரத்தில் ஜெயம்ரவியிடம் இக்கதை சொல்லும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. போட்ச் சொன்னவுடன் அவருக்கும் பிடித்து படம் தயாராகிவிட்டது.

அதைவிட அந்தப்படத்துக்கு ஆதியே இசையமைப்பாளாராகவும் ஆகிவிட்டார்.

இப்போது படம் பெரிய வெற்றி என்றதும் நம்மிடம் வந்த கதையை விட்டுவிட்டோமே என்று ஆதி வருந்துகிறாராம்.

Related Posts