சினிமா செய்திகள்

திடீர் திருப்பம் – பாலா இயக்கத்தில் சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே, மே 31 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

சூர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களில் நிறைவடையவிருக்கிறது.

அதைத்தொடர்ந்து அவர் இறுதிச்சுற்று இயக்குநர் சுதா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

அதற்கடுத்து சிறுத்தை சிவா, ஹரி ஆகியோர் இயக்கங்களில் சூர்யா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது.

இப்போது அதில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.

நந்தா, பிதாமகன் ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

சுதா இயக்கும் படம் முடிந்தவுடனா? அல்லது அதற்கும் பிறகா? என்கிற பேச்சு நடந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Related Posts