சினிமா செய்திகள்

ரஷ்யா சென்றது காப்பான் படக்குழு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இன்னும் ஒரு பாடல்காட்சி மட்டும் படமாக்கப்படவேண்டியிருப்பதாகச் சொல்லப்பட்டது.

அது சூர்யா சாயிஷா ஆகிய இருவரும் நடிக்கும் காதல்பாடல்.

ஹாரிஸ்ஜெயராஜ் இசையில் கபிலன் எழுதியுள்ள அந்தப் பாடல்பதிவு மிக அண்மையில் நடைபெற்றது.

அந்தப்பாடலை,அழகிய தமிழ்மகன் படத்தில் இடம்பெற்ற மதுரைக்குப் போகாதேடி பாடலைப் பாடிய பென்னிதயாளும் தர்ஷனாவும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

அந்தப்பாடலின் படப்பிடிப்புக்காக காப்பான் படக்குழு ரஷ்யா புறப்பட்டிருக்கிறதாம்.

மிக அழகிய அந்தக் காதல் பாடலின் காட்சிகளும் மிகச் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக பல நாடுகளில் தேடி கடைசியில் ரஷ்யாவில் ஓரிடத்தைக் கண்டுபிடித்தார்களாம்.

அங்கு படப்பிடிப்பு நடத்த புறப்பட்டுச் சென்றிருக்கிறது காப்பான் படக்குழு.

அந்த்ப்பாடல் வரிகளுக்கு இணையாக காட்சிகளும் பெரிதாகப் பேசப்படும் என்கிறார்கள்.

Related Posts