நாயகனுக்கு போலீஸ்வேடம் ஆனால் போலீஸ் கதை இல்லை – சத்ரு இயக்குநர் பேட்டி
பரியேறும் பெருமாள் பட நாயகன் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள படம் சத்ரு. கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.
இவர்களோடு பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்தப் படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
மைல்ஸ்டோன் மூவிஸ் ஜி.டில்லிபாபு மார்ச் 8 ஆம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.
இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி, இசை அம்ரிஷ்,
பாடல்கள் கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ,படத்தொகுப்பு பிரசன்னா.ஜி.கே, கலை ராஜா மோகன்,சண்டைப்பயிற்சி விக்கி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் நவீன் நஞ்சுண்டன்.
இந்தப் படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்…
இந்தப் படத்தில் கதிர் கேரக்டர்தான் போலீஸ் ஆனால் இது போலீஸ் கதை கிடையாது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த ஒரு பரபரப்பான சம்பவங்கள் தான் படம்.
தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டுவரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளிகளை கதிர் 24 மணி நேரத்தில் எப்படித் தேடி பிடித்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
படம் முதலில் முதலிலிருந்து இறுதிவரை விறுவிறுவென இருக்கும்.
இவ்வாறு இயக்குநர் நவீன் நஞ்சுண்டன் கூறினார்.











