கார்த்தி நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கார்த்தி இப்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவற்றைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் தொடங்கியுள்ளது.
அந்தப் புதியபடத்தில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார்.
வித்தியாசமான கதை அமைப்பில் உருவான ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மித்ரனுடன் கார்த்தி இணைந்திருக்கிறார்.
பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண்குமார் ‘புரொடக்ஷன் 4’ படைப்பாக பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்க, இன்று தீபாவளி நன்னாளில் பூஜையுடன் பாடல் பதிவு ஆரம்பமானது.
இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்.
ஆக்ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.












