காஞ்சனா 3 வெளியீட்டில் திடீர் மாற்றம் ஏன்?
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்தப்படத்தை ஏப்ரல் 18 அன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தார்களாம். கோடை விடுமுறையைக் குறி வைத்து அந்தத் தேதியில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், மே1 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து சூர்யாவின் என் ஜி கே படம் வெளியாகவிருக்கிறதாம்.
இதனால் ஏப்ரல் 18 இல் படத்தை வெளியிட்டால் பத்து நாட்கள் மட்டுமே நல்ல வசூல் இருக்கும் கொஞ்சம் முன்கூட்டியே வெளியிட்டால் இன்னும் அதிக வசூல் செய்யலாம் என்று கணக்குப் போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், காஞ்சனா 3 படத்தை ஏப்ரல் 12 அன்றே வெளியிட முடிவு செய்திருக்கிறதாம்.
இதனால் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியிடவிருக்கும் சில படங்கள் அச்சத்தில் இருக்கின்றன என்று சொல்கிறார்கள்.











