ஸ்கிரீன்சீன் நிறுவனத்தின் 3 படங்களில் ஜெயம்ரவி நடிப்பது இதனால்தான்
கடந்த ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக், அடங்கமறு ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அவற்றைத் தொடர்ந்து ஜெயம் ரவி மூன்று படங்களில் நடிக்கவிருக்கிறார்.
ஸ்கிரீன் சீன் நிறுவனத்துடன் இணைந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க, ஒப்பந்தம் செய்திருப்பதாக ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
என்னென்ன படம் யார் யாரெல்லாம் இதில் நடிக்கிறார்கள் போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் மூன்று படங்களில் ஜெயம்ரவி நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? என்கிற கேள்விக்குத் திரையுலகில் உலாவரும் விடை என்ன தெரியுமா?
ஸ்கீரின்சீன் நிறுவனத்தினர் கட்டுமானத் தொழிலில் புகழ்பெற்றவர்கள். அவர்கள் கைவசம் சென்னை போயஸ் கார்டனில் சுமார் 25 கோடி மதிப்பில் ஒரு வீடு இருக்கிறதாம். அந்த வீட்டை ஜெயம்ரவிக்குக் கொடுத்துவிடுவதாக அவர்கள் உறுதி கொடுத்திருக்கின்றனராம்.
அதற்குக் கைமாறாக மூன்று படங்களில் நடிக்க ஜெயம்ரவி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.











