புது நடிகைக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பிறந்தநாள் பரிசு
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல்’ படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
அஅதற்கடுத்ததாக இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இந்தப் படத்தையும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
இந்தப்படத்தின் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார்.
இந்த நிலையில், இந்தப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவானா ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இவர் பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவானாவின் பிறந்தநாள் இன்று.அவருக்கான பிறந்தநாள் பரிசாக இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இரண்டாவது படமே பெரிதாக அமைந்துள்ளதால் அவர் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்.











