அஜீத்தின் அடுத்த படம் குறித்துப் பரவும் தகவல்
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத்.
இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் மாற்றாக இப்படம் தயாராகிறது. இப்படத்தில் நாயகியாக வித்யாபாலன் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இந்தப் படத்தைத் தயாரிக்கும் போனிகபூர்தான், அஜீத்தின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறார். அந்தப்படமும் நேரடிக்கதை இல்லை.
2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஹெப்தா: த லாஸ்ட் லெக்சர்’ என்கிற எகிப்துப் படத்தின் மொழிமாற்று என்று தகவல் பரவி வருகிறது.
பிங்க் பட மொழிமாற்றில் அஜீத் நடிக்கிறார் என்று முதலில் தகவல் வந்தபோது அதை மறுத்தது அஜீத் தரப்பு. இப்போது இந்தத் தகவலையும் மறுக்கிறது.











