காஷ்மீர் துயரம் – கமலும் ரஜினியும் கண்டுகொள்ளவில்லை,சூர்யா கண்டனம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தைக் குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர் நடத்திய கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புல்வமா தாக்குதல் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் நடிகர் சூர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது. தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி நடத்திவரும் கமலும் கட்சி தொடங்குவதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் ரஜினியைம் இந்தத் தாக்குதல் பற்றிப் பேசவில்லை.
அரசியலில் இல்லாத சூர்யா இதுபற்றிப் பேசியிருக்கிறார் என்று அவரை பலரும் பாராட்டுகிறார்கள்.











