சிம்பு பட முன்னோட்டம் வெளியானது
நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படம் `வந்தா ராஜாவா தான் வருவேன்.’ இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளிவரும் இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தரிண்டிக்கி தாரிடி படத்தின் மொழிமாற்று.
இப்படத்தில் நாயகிகளாக மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மகத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இடம்பெற்றுள்ள `எனக்கா ரெட் கார்டு..எடுத்துப்பார் ரெக்கார்டு’ என்ற பாடல் காணொலி வெளியாகியது.
இந்த நிலையில் படத்தின் முன்னோட்டம் சனவரி 27 ஆம் தேதி இரவு வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.
முன்னோட்டத்தைக் காண;











