சிவகார்த்திகேயன் படம் தற்போதைய நிலை இதுதான்
இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
ரகுல்பிரித்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அறுபது விழுக்காடு நிறைவடைந்திருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியிருக்கிறது.
படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் நாயகி ரகுல்பிரீத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடிக்கிறார்கள். இந்தத் தகவலை சிவகார்த்திகேயன் டிவிட்டரில் சொல்லியிருக்கிறார்.
சுமார் மூன்று வாரங்கள் இப்படப்பிடிப்பு நடக்கும் என்கிறார்கள்.











