சினிமா செய்திகள்

யோகிபாபுவின் அடாவடிகள் – புழுங்கும் படக்குழுவினர்

யோகிபாபு இப்போது நிறையப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் பல படங்களில் அவர் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

இவற்றில் சில படங்களுக்கு மொத்தமாகச் சம்பளம் பேசும் அவர் பெரும்பாலான படங்களுக்கு நாள் கணக்கில் சம்பளம் பேசியிருக்கிறாராம்.

ஒரு நாளைக்கு ஐந்து இலட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம்.

அவ்வளவு கொடுத்து அவரை நடிக்க வைக்கப் பல தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகவிருக்கின்றன என்பதால் தெம்பாக இருக்கிறார்.

அதேசமயம், படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவது படப்பிடிப்பில் இயக்குநர் சொல்வதை முழுமையாகக் கேட்க மறுப்பது என்கிற அடாவடிகளை அசராமல் செய்கிறாராம்.

ஒரு நாளுக்கு ஐந்து இலட்சம் என்ப்தால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இருபது நாட்களுக்குள் முடித்துவிட்டால் ஒரு கோடி கொடுத்தால் போதும் என்று படக்குழுவினர் திட்டமிடுகிறார்கள்.

ஆனால், இவரோ இருபது நாட்களை முப்பது நாட்களாக்கப் பார்க்கிறாராம்.

காலை ஒன்பது மணிக்குப் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றால் பதினொன்றை அல்லது பனிரெண்டு மணிக்குத் தான் வருகிறாராம். மாலையிலும் ஆறு மணிவரை இருப்பதில்லையாம். ஐந்து மணிக்கு முன்பாகவே நான் போகவேண்டும் என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறாராம்.

இதனால் படப்பிடிப்பு நாட்கள் அதிகமாகிறதாம்.அது யோகிபாபுவுக்கு இலாபம். படக்குழுவுக்கு நட்டம்.

இதுமட்டுமின்றி புதிய இயக்குநர்கள் படம் என்றால், ஒரு காட்சியை மீண்டும் படமாக்கவேண்டும் என்று கேட்டால், இதுவே போதும் நான் படத்தில் இருப்பதே பலம்தான் மிகச்சரியாக நடிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும் சொல்கிறாராம்.

இதனால் அவரை வைத்துப் படமெடுப்பவர்கள் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.

Related Posts