துப்பாக்கிமுனையை தூக்குங்கள் – ஹீரோக்கள் தரும் நெருக்கடியால் பரபரப்பு
தினேஷ்செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துள்ள துப்பாக்கிமுனை படம் டிசம்பர் 14 அன்று வெளியானது.
தமிழகமெங்கும் சுமார் 450 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்று அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியிருந்தார்.
இப்படம் வெளியானதும் நல்ல விமர்சனங்களை மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்றதாம்.
வெள்ளி,சனி,ஞாயிறு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய இந்தப்படம் வார நாட்களில் அறுபதிலிருந்து எண்பது விழுக்காடு வரை அரங்குகள் நிரம்பியதாம்.
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் நடக்கும் நேரத்தில் இவ்வளவு கூட்டம் கூடுவது படத்துக்குப் பெரும் பலமாக இருக்கிறது.
அடுத்த வாரம் வரை ஓடினால் குடும்பம் குடும்பமாக இந்தப்படத்துக்கு மக்கள் வர வாய்ப்பிருக்கிறது என்பது திரையரங்கு உரிமையாளர்களின் கருத்து.
ஆனால், இந்த வாரம் தனுஷின் மாரி2, விஜயசேதுபதியின் சீதக்காதி, சிவகார்த்திகேயனின் கனா, ஜெயம்ரவியின் அடங்கமறு, விஷ்ணுவிஷாலின் சிலுக்குவார்பட்டிசிங்கம் மற்றும் விஷால் வெளியிடும் கே ஜி எப் ஆகிய ஆறு படங்கள் வெளியாகின்றன.
ஒரே வாரத்தில் ஆறு படங்கள் அதுவும் வரவேற்புக்குரிய நாயகர்களின் படங்கள் என்பதால் , யார் படத்தை திரையிடுவது என்று திரையரங்குக்கார்ர்களுக்குப் பெரும் தர்மசங்கடம்.
இது போதாதென்று நன்றாகப் போகிற் துப்பாக்கிமுனை படம் ஓடும் திரையரங்குகளுக்கும் நெருக்கடியாம்.
இந்தப்படத்த எடுத்துவிட்டு என் படத்தைத் திரையிடுங்கள் என்று எல்லா நாயகர்கள் தரப்பிலிருந்தும் பேசுகிறார்களாம்.
ஒரு படம் ஓடுவதே பெரிது அப்படிப்பட்ட காலத்தில் ஓடுகிற படத்தை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் என்கிற அடிப்படையில் நாயகர்கள் பேசுகிறார்கள்.
இதனால் திரையரங்குக்கார்ர்களுக்கு நெருக்கடி, விக்ரம்பிரபு உள்ளிட்ட துப்பாக்கிமுனை படக்குழுவுக்கு பெரும் வருத்தமாம்.
ஹீரோக்கள் விட்டுக்கொடுக்காமல் ஈகோ மோதலில் ஈடுபடுவதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.











