சினிமா செய்திகள்

விஷால் வெளியிடும் கே ஜி எஃப் படத்துக்கு வந்த திடீர் சிக்கல்

கன்னடத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கே.ஜி.எஃப்’. இந்தப்படத்தை `உக்ரம்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ரவிபசூரூர் இசையமைத்துள்ள இதற்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்துர் தயாரித்துள்ளார். இப்படத்தை கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் மொழிமாற்று செய்து வெளியிடுகின்றனர்.

பாகுபலி, 2.ஓ படங்களின் வரிசையில் சேரக்கூடிய வகையில் இந்தப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தின டிரெய்லர் வெளியான பின்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை 5 மொழிகளிலும் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி வெளியிடவிருக்கின்றனர்.

தமிழில் விஷால் வெளியிடுகிறார்.

இந்தப்படத்தின் கதை மும்பையில் நடப்பது போல அமைந்திருப்பதால் படத்தில் நிறைய இந்தி வசனங்கள் மற்றும் பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கின்றன.

மற்ற மொழிகளில் மாற்றம் செய்யும்போதும் முக்கியமான வசனங்கள் மற்றும் பாடல்வரிகள் இந்தியிலேயே இடம்பெற்றிருக்கும் வகையில் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் தமிழில் வெளியிடும் விஷால், மற்ற மொழிகளில் இந்தியில் இருந்தாலும் தமிழகத்தில் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டாராம்.

அதனால் இங்கு எல்லாமே தமிழில் இருக்கிறதாம்.

இதனால் கர்நாடகத்தில் சிக்கல் ஏற்பட்டுவிட்டதாம்.

தமிழில் மட்டும் தமிழ் பேசுகிறது கன்னடப்படத்தில் இந்தியில் வருகிறது இங்கும் அவற்றை கன்னடத்தில் மாற்றவேண்டியதுதானே என்று கேட்டு கன்னட அமைப்புகள் சிக்கலைக் கிளப்பியிருக்கின்றனவாம்.

அவரகளைச் சமாதானம் செய்து படத்தை வெளியிடும் வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறதாம்.

Related Posts