சினிமா செய்திகள்

ரஜினியின் அண்ணாத்த பட அரங்கில் விஷால்

விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர்.

இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்தை தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத் தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. முதல்கட்டப் படப்பிடிப்பு நடத்த இடம் தேடியவர்களுக்கு ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் இருந்த ஓர் அரங்கம் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதாம்.

அந்த அரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அணுகியபோதுதான் அது ரஜினியின் அண்ணாத்த படத்துக்காக அமைக்கப்பட்ட அரங்கம் என்று தெரியவந்திருக்கிறது.

உடனே, அண்ணாத்த இயக்குநர் சிவாவிடம் அந்த அரங்கில் சிற்சில மாற்றங்கள் செய்து நாங்கள் படப்பிடிப்பு நடத்திக் கொள்கிறோம் என்று அனுமதி கேட்டிருக்கிறார்கள்.

அவரும் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டாராம்.இதனால் அடுத்த மாதம் அதே அரங்கத்தில் முதல்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறாராம் ஆனந்த் சங்கர்.

Related Posts