சினிமா செய்திகள்

சிம்பு படத்துக்குத் தடை – விஷாலுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். நவம்பர் 6 தீபாவளி நாளில் படத்தின் பெயரும் முதல் பார்வையும் வெளியானது. அப்போதே இப்படம் 2019 பொங்கள் வெளியீடு என்றும் சொல்லியிருந்தார்கள்.

இந்நிலையில் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை நடத்தி சிம்பு, ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவரை வைத்து யாரும் படம் எடுக்கவேண்டாம் என்று சொல்லியிருந்ததாம்.

ஆனால் அதன்பின், மணிரத்னம் படம் அதைத்தொடர்ந்து இப்போது சுந்தர்.சி இயக்கும் படம் ஆகியனவற்றில் நடிக்கிறார்.

இதற்கு மைக்கேல் ராயப்பன் எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

சிம்புவால் நஷ்டமடைந்ததற்கு எனக்கு நியாயம் வேண்டும். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தை நம்பி இருக்கிறேன். எனது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் சிம்பு வேறு படங்களில் நடிக்கக்கூடாது. இப்போது அவர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்புகொண்டு மீண்டும் புகார் செய்து இருக்கிறேன். படப்பிடிப்பு நடத்த அனுமதிக்ககூடாது. தயாரிப்பாளர் சங்கம் எனக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன் புகார் அளித்தார்.

மைக்கேல் ராயப்பனின் இந்தப் புகார் காரணமாகவே இச்சிக்கலை முடிக்காமல் படத்தை வெளியிடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறதாம்.

இதுகுறித்து எத்தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லையெனினும், சிம்பு ரசிகர்கள் ஏராளமானோர் சமூகவலைதளங்களில் காணொலி மூலமாக, எங்கள் தலைவரின் படத்துக்குத் தடை விதிப்பதா? தொடர்ந்து எங்கள் தலைவருக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொல்லை கொடுப்பது எதனால்? முடிந்தால் எங்கள் தலைவர் படத்தோடு உங்கள் படத்தை வெளியிட்டு மோதிப்பாருங்கள் விஷால்

இப்படியெல்லாம் சிம்பு ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Related Posts