சினிமா செய்திகள் நடிகர்

விஜய் ரசிகர்களிடம் சிக்கித் தவிக்கும் நகைச்சுவை நடிகர் – விஜய் தலையிடுவாரா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.

ரசிகர்களின் சீண்டல் தொடர்பாக, “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்துவிடுகிறது” என்று தற்போது தெரிவித்திருக்கிறார் கருணாகரன்.

கருணாகரனின் இந்த ட்வீட்டைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவருக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டி தீர்த்துவருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கருணாகரன் “நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவனா என்ற முட்டாள்தனமான கேள்வியைக் கேட்காதீர்கள் குழந்தைகளே. நான் எப்போதாவது ‘சர்கார்’ தமிழ் தலைப்பா என்று கேட்டேனா?. எனது அடுத்த கேள்வி தாய்மொழியில் இருக்கும். சர்கார் அடிமை தயாராக இருக்கிறீர்களா?” என்று தெரிவித்திருக்கிறார். இதனால் மேலும் விஜய் ரசிகர்கள் அவரைக் குறிப்பிட்டு திட்டத் தொடங்கினார்.

இந்நிலையில், “என்னை அச்சுறுத்துவதன் மூலமாக நீங்கள் பதில் கூற முடியாமல் உங்கள் இயலாமையை வெளிப்படுத்துகிறீர்கள். உங்களுக்கு தைரியமிருந்தால் இந்த ட்விட்ட்ர் கணக்கை டேக் பண்ணுங்க” என்று கூறி, விஜய் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை டேக் பண்ணியிருக்கிறார்.

கருணாகரனின் இந்த வெளிப்படையான சாடல், இப்பிரச்சினையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தச் சிக்கலில் விஜய் தலையிட்டு அவருடைய ரசிகர்களை அமைதிப் படுத்துவாரா? என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

Related Posts