சினிமா செய்திகள் நடிகை

விஜய் அஜித் சூர்யா பற்றி ஸ்ரீரெட்டி சொன்னது என்ன தெரியுமா?

ஆந்திராவில், தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி.

சிறிது காலம் கழித்து தமிழ் நடிகர்கள், இயக்குநர்களைப் பற்றியும் குற்றம் சாட்டினார்.

பாலியல் மிரட்டல் மூலம் ஸ்ரீரெட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழ் இயக்குநர் வாராகி சென்னை காவல் ஆணையரிடம் மனு கொடுக்க பதிலுக்கு ஸ்ரீரெட்டியும் வாராகி மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யும்படி மனு அளித்தார்.

இந்த புகார் மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஏதாவதொன்றைப் பேசிக்கொண்டே இருக்கிறார் ஸ்ரீரெட்டி. அண்மையில் ரசிகர்களுடன் முகநூலில் கலந்துரையாடிய ஸ்ரீரெட்டி அவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது,

தெலுங்கில் இனிமேல் நடிக்க மாட்டேன். தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. தமிழில் வாய்ப்புகளும் வருகின்றன. ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கிறேன். எனக்கு நடிகர் அஜித்தை மிகவும் பிடிக்கும். விஜய் அழகான நடிகர். சூர்யாவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நல்லவர்கள். மலையாள நடிகர்களும் அழகாக இருக்கிறார்கள். கவர்ச்சியாகவும் உள்ளனர் என்றார்.

தமிழில் நடிக்க ஒப்பந்தமாவேன் என்று அவர் சொல்லியிருப்பதும் தமிழ்ன் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா பற்றி அவர் புகழ்ந்து பேசியிருப்பதும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts