ரசிகர்களால் திடீர் சர்ச்சை, உடனே சரி செய்த சிவகார்த்திகேயன்
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், லால், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சீமராஜா’.24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 3) மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவுக்காக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பிரம்மாண்டமான வளைவுகள், போஸ்டர்கள் என மதுரை முழுக்க வைத்திருந்தார்கள். இதற்காக புதுக்கோட்டையில் சுவரில் வரைந்திருந்த ஓவியத்தை அழித்து ‘சீமராஜா’ என்று எழுதினார்கள்.
இதனை புகைப்படம் எடுத்து, ‘இது எந்த வகையில் நியாயம் சிவா அண்ணா’ என்று பலரும் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்கள். இதைத் தொடர்ந்து சுவர் ஓவியங்களை அழித்தவர்களைத் தொடர்புக் கொண்டு கண்டித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மேலும், பழைய ஓவியங்கள் எப்படி இருந்ததோ அதை அப்படியே வரைய வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஓவியம் வரையும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
தன் ரசிகர்களால் ஒரு தவறு நடந்ததென்று தெரிந்தவுடன் அதை உடனே சரி செய்த சிவகார்த்திகேயனை எல்லோரும் பாராட்டுகிறார்கள்.











