சினிமா செய்திகள் நடிகர்

சூர்யா விஜய். ரசிகர்கள் மோதல் – தயாரிப்பாளரின் சமரசமும் வீண்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’என்.ஜி.கே’.இந்தப் படப்பிடிப்புக்கு இடையே, செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால். ‘என்.ஜி.கே’ படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் சென்னையில் ’என்.ஜி.கே’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதனால் தீபாவளி வெளியீடு உறுதி என்றும், விஜய்யின் ‘சர்கார்’ படத்துடன் போட்டி என்று சூர்யாவின் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கருத்துகளைப் பகிர்ந்தார்கள்.

இதனால், விஜய் – சூர்யா ரசிகர்களுக்கு இடையே கருத்து மோதல் உருவானது. கடுமையான சொற்களில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்கள்.

இதனைத் தொடர்ந்து ‘என்.ஜி.கே’ தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் “நிறையப் பேர் என்.ஜி.கே படம் குறித்துக் கேட்கிறார்கள். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். படப்பிடிப்பு திட்டமிட்டதை விடச் சற்றுத் தாமதமாகியுள்ளது. விரைந்து முடிக்க முயற்சிக்கிறோம்.

இன்னும் ஒரு வாரத்தில் படத்தைப் பற்றிய அண்மைத் தகவல்களைப் பகிர்கிறேன். அதேநேரத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை நிறுத்துங்கள். அது அவ்வளவு முக்கியமானதல்ல. நண்பர்கள் தின வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அதன்பின்னும் ரசிகர்களின் சண்டை ஓயவில்லை. சண்டை போடாதீங்கன்னு சொன்னா அதுக்கும் புது அர்த்தம் கண்டுபிடிச்சு அடிச்சுகிறீங்களேப்பா என்று ட்வீட் செய்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபு.

Related Posts